ஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம்.
ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow பகுதியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் தனது கற்கையின் இறுதி நாட்களின் போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்நதார்.புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிலையில் 2015ம் ஆண்டில் தீராத நோயினால் பாதிக்கப்பட்டார்.
25 வயதான வித்தியா அல்போன்ஸிற்கு புற்றுநோய் தீவிரமடைய ஆரம்பித்த நிலையில் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்தியாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் வித்தியாவின் தாயார் தனது ஸ்டெம் செல்களை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இதன்மூலம் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்பினார்.இரண்டு வருடங்களின் பின்னர் தனது இறுதியாண்டு கற்கை நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரியாக பட்டம் பெறும் விழாவில் கலந்து கொண்டார்.