பிரித்தானியாவில் சிறப்பாக நடந்து முடிந்த கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

0
381

பிரித்தானியாவில் கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஐந்து பேர் கொண்ட அணியில் முதலாம் இடத்தினை சுபன் விளையாட்டுக் கழகம் வெற்றிக்கேடையத்தையும் பணப்பரிசு 1000 பவுன்ஸ்களையும் வென்றனர்.

இரண்டாம் இடத்தினை ஈழம்ஸ்டார் கழகம்வென்று வெற்றிக்கேடயம் மற்றும் மற்றும் 750 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றனர்.

மூன்றாம் இடத்தினை கோல்ட்ஸ்டார் விளையாட்டுக் கழகம் வென்று வெற்றிக்கேடயம் மற்றும் மற்றும் 500 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றனர்.

மேலும் ஐந்து பேர் கொண்ட அணியில் ஜீவன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு அவர் வெற்றிக் கேடையத்தினையும் 100 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றார்.

அடுத்து நான்கு பேர் கொண்ட அணியில் சுபன் விளையாட்டு  கழகத்தினர் வென்று வெற்றிக்கேடயம்  மற்றும் 500 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றனர்.

இரண்டாம் இடத்தினை தாயகம் விளையாட்டுக் கழகம் வென்று வெற்றிக்கேடயம் மற்றும் 300 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றனர்.

மூன்றாம் இடத்தினை ஈஸ்ட் லண்டன் விளையாட்டுக் கழகம் வென்று வெற்றிக்கேடயம்  மற்றும் 200 பவுன்ஸ்களையும் தட்டிச்சென்றனர்.

இதில் ஆட்ட நாயகனாக சுபன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த திரு சுதன் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கேடையம் மற்றும் 100 பவுண்ஸ்களை தட்டிச்சென்றார்.

நான்கு பேர் கொண்ட அணியில் வெற்றி பெற்ற சுபன்  விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்ற 500 பவுன்ஸ்களையும் உலகத்தமிழர் வரலாற்று மைய வளர்ச்சி நிதிக்காக அன்பளிப்பு செய்தனர். அத்துடன் இரண்டாம் இடம் பெற்ற தாயகம் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்ற 300 பவுன்ஸ்களை உலகத்தமிழர் வரலாற்று மைய வளர்ச்சி நிதிக்காக அன்பளிப்பு செய்தனர்.

இரு அணியிலும் வெற்றி பெற்ற சுபன் கழகத்திற்கு கேணல் கோபித் நினைவு சுமந்த சுற்றுக் கேடையத்தினை சுபன் விளையாட்டுக்கழகம்  தட்டிச்சென்றனர். தொடர்ந்து மூன்று வருடங்கள் இவ்விளையாட்டு போட்டி நடைபெறும். மூன்று வருடங்களிலும் தொடர்ந்து ஒரே  விளையாட்டுக் கழகம்  வெற்றி பெற்றால் சுற்றுக் கேடையம் அந்த விளையாட்டுக் கழகத்திற்கு சொந்தமாகும்.

மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வில்…

சுற்றுக் கேடையத்தினை உலகத்தமிழர் வரலாற்று மைய ஒருங்கிணைப்பாளர் திரு. தயாபரன் அவர்கள் வழங்கினார். தொடந்து வெற்றி பெற்ற இரண்டாவது அணிக்கு வைப்பக மேலாளர் திரு.பாலகிருஷ்ணன்  அவர்கள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மூன்றாவது அணிக்கு தமிழர் கல்விக் கலைபண்பாட்டு நடுவத்தின் இணைப்பாளர் திரு.தமிழினியன் அவர்கள் வழங்கினார்.

அடுத்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை கேணல் கோபித் அவர்களின் உறவினரான ஆசிரியை திருமதி வசந்தகுமாரி சந்திரபாலன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். அடுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு.யோகி அவர்களும்,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான  திரு.குணசீலன் அவர்களும் வழங்கினார்கள்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசினை மாவீரர் பணிமனையின் இணைப்பாளர் திரு.சூட்டி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்களை திருமதி தவமணி வன்னியசிங்கம் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.