உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!

0
340

ஈழ விடுதலைக்காக களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் ஆகியோரையும், ஸ்ரீலங்கா இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவுகூறும் முகமாக மாதந்தோறும் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில்  நினைவு கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆடி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட  மக்களையும் நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திரு பவான் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தேசிய செயற்பாட்டாளர் திரு அமர்நாத் அவர்களும், தேசியக்கொடியினை திரு.கபிலன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. மேலும் மாவீரர் நினைவுத்தூபிக்கான ஈகைச்சுடர் மற்றும் மலர் மாலையினை லெப்.கேணல் டிக்கானின்  உறவினரும் முன்னாள் போராளியுமான திரு.நவதாஸ் ஏற்றி வைத்தார். மாவீரர் நினைவுத் தூபிக்கான ஈகைச்சுடர் மற்றும் மலர் மாலையினை திரு ஞானபவணி ரவீந்திரன் அவர்களும், மேஜர் ஜேசுதாசின் சகோதரி திருமதி சுகிர்தகுமார் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது.